2019 ஜனவரியில் 2வது உலக முதலீட்டாளர் மாநாடு: பொருட்காட்சியில் பங்கேற்க முன்பதிவு தொடக்கம்…

சென்னை:

டுத்த ஆண்டு (2019) ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற உள்ள 2வது உலக முதலீட்டாளர் மாநாட்டில் அமைக்கப்படும் பொருட்காட்சியில் பங்கேற்க விருப்புவர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

தமிழக அரசு சார்பில்  2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாடு, அடுத்த ஆண்டு  ஜனவரி மாதம்  23, 24-ம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உலகம் முழுவதும் இருந்து தொழிலதிபர்கள் சென்னை வர இருக்கின்றனர். அதற்கான ஏற்பாடுகளை நடைபெற்று வருகின்றன. இந்த மாநாட்டின்போது, உலக முதலீட்டாளர்களை கவரும் வகையில், பொருட்காட்சியும் அமைக்கப்பட உள்ளது.

இந்த  பொருட்காட்சி அரங்குகளுக்கான முன்பதி இன்று தொடங்கி உள்ளது. சுமார்  250 பொருட்காட்சி அரங்குகள் அமைக்கப்பட இருப்பதாகவும், இதற்கான முன்பதிவு இன்று தொடங்கி, நவ.15ந்தேதி வரை நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

பொருட்காட்சி அரங்குக்கு பதிவு செய்ய www.tngim.com என்ற தளத்தில் பதிவு செய்யலாம்

You may have missed