ஜனவரி 23, 24ம் தேதி: தமிழகத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு: அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

சென்னை:

மிழகத்தில்  ஜனவரி 23, 24ம் தேதிகளில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

மேலும் ஜெ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அங்கு அமைச்சர்கள் யாரும் தங்க வில்லை என்றும் தெரிவித்தார்.

2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019ம் ஆண்டு  ஜனவரி 23, 24-ஆம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறும் என தமிழக அரசு  ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உலகம் முழுவதும் இருந்து தொழிலதிபர்கள் சென்னை வர இருக்கின்றனர். அதற்கான ஏற்பாடுகளை நடைபெற்று வருகின்றன. இந்த மாநாட்டின்போது, உலக முதலீட்டாளர்களை கவரும் வகையில், சுமார்  250 பொருட்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.

இந்த நிலையில்  இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில்  தொழில் செய்ய உகந்த சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதுவரை 17.25 லட்சம் சிறு, குறு நடுத்தர தொழில்கள் தமிழகத்தில் இயங்கி வருவதாகவும் கூறினார்.

மேலும் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்,  சசிகலாவின் குடும்பத்தினர் மருத்துவமனையில் தங்கியிருந்து சாப்பிட்டதால் தான் ரூ 1 கோடிக்கு மேல் செலவு வந்தது என்றும், மருத்துவமனையில் அமைச்சர்கள் யாரும் தங்கவில்லை, சசிகலா குடும்பத்தினர் மட்டுமே தங்கியிருந்தனர் என்றும் கூறினார்.