2வது நினைவு நாள்: ஜெயலலிதா நினைவிடத்தில் டிடிவி அணியினர் அஞ்சலி

சென்னை:

றைந்த ஜெயலலிதாவின் 2வது நினைவு தினத்தையொட்டி, அவரது சமாதிக்கு டிடிவி தினகரன் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினரில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.  இதையொட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில்  டி.டி.வி.தினகரன் தலைமையில் அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து ஜெயலலிதா நினைவிடம் நோக்கி அமைதி பேரணி நடந்தது.

இந்த பேரணிக்கு முக்கிய நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். பேரணியில் டிடிவி தினகரன் ஜீப்பில் நின்றுகொண்டு வந்தார். தொண்டர்கள் மட்டும் நடந்து வந்தனர்.

வாலாஜா சாலை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை வழியாக கடற்கரை காமராஜர் சாலைக்கு சென்று அங்குள்ள  ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.