2வது அமைச்சர்: தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா…

சென்னை:

மிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதை யடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  1,18,594 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதிப்பு மக்களிடையே மன நிம்மதியை குலைத்துள்ளது.

ஏற்கனவே பொதுமக்கள் மட்டுமின்றி சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேர் கொரோனா தாக்கம் காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனும் கொரோனா பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட  மின்துறை அமைச்சர் தங்க மணிக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்  சென்னையில் உள்ள  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

கார்ட்டூன் கேலரி