2வது டி20 போட்டி : இந்தியா – இங்கிலாந்து பலப்பரீட்சை

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டி20 போட்டிகள் வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு கார்டிஃப் நகரில் உள்ள சோபியா கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய அணி 3 டி20, 3 ஒரு நாள் போட்டி மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. அதன்படி தற்போது டி20 போட்டிகள் நடந்து வருகின்றன.
/india-vs-ingland
செவ்வாய்க்கிழமை இரவு மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 8விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களை எடுத்து அசத்தலான வெற்றி அடைந்தது. இந்திய அணியின் சார்பாக லோகேஷ் ராகுல் 54 பந்துகளில் 101 ரன்களை குவித்தார். இந்த போட்டியில் குல்தீப் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார்.

இந்நிலையில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் வெற்றிப்பெறும் கட்டாயத்திற்கு இங்கிலாந்து அணி தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவும் 2வது டி20 போட்டியில் இங்கிலாந்தை தோற்கடிக்கும் முடிவுடன் செயல்பட உள்ளது. இரு அணிகள் வெற்றிப்பெறும் குறிக்கோளுடன் இன்று இரவு களத்தில் சந்திக்க உள்ளனர். முதல் டி20 போட்டியில் தோற்றதன் காரணமாக இன்று நடைபெறும் போட்டியில் இந்தியாவை பழிவாங்க இங்கிலாந்து முயற்சிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த போட்டியில் மட்டும் இந்தியா வெற்றிப்பெற்றுவிட்டால் இங்கிலாந்துடன் மோதும் டி20 போட்டிகளின் வெற்றியை இந்தியா தக்கவைத்துக் கொள்ளும்.