2வது டி20 போட்டி: மழை குறுக்கிட்டதால் போட்டி பாதியிலேயே நிறுத்தம்

இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெறும் 2வது டி20 போட்டி மழை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. போட்டி தொடங்கி ஆஸ்திரேலிய அணி 19 ஓவர்களில் 132 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது.

match

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. அதன்படி நேற்று முன் தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்யாசத்தில் வெற்றிப்பெற்றது.

அதன்பிறகு 2வது டி20 போட்டி மெல்போர்ன் நகரில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தினர். இந்திய பந்து வீச்சாளர்களின் பவுலிங்கை சமாளிக்க முடியாத ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ரன்கள் குவிக்க திணறினர். முடிவாக ஆஸ்திரேலிய அணி 19 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களை எடுத்தது.

இந்நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் தடைப்பட்டது. மழைப்பொழிவு அதிகமாக இருந்ததால் ஆட்டத்தை பாதியிலேயே நிறுத்துவதாக நடுவர்கள் அறிவித்துள்ளனர். இதையடுத்து இரு அணி வீரர்களும் பெவிலியன் திரும்பினர்.

இதற்கு முந்தைய போட்டியிலும் மழை குறுக்கிட்டதால் இந்திய அணிக்கு அதிக ரன்கள் டக்வோர்த் லூவிஸ் முறையில் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.