உமேஷ் யாதவின் அசத்தல் பந்து வீச்சில் சுருண்ட மே.இந்திய தீவுகள் அணி

உமேஷ் யாதவின் அசத்தல் பந்து வீச்சில் இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் மேற்கு இந்திய தீவுகள் அணி 311 ரன்களுக்கு ஆட்டம் இழந்துள்ளது.

india

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவுடன் 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி-20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. தற்போது இந்தியா – மேற்கு இந்திய தீவுகளுக்கான டெஸ்ட் தொடா் நடைபெற்று வருகிறது.

முன்னதாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 272 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்தது. இதனைத் தொடா்ந்து இரு அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தோ்வு செய்தது.

மேற்கு இந்திய தீவுகள் அணியை பொருத்தளவில் கேப்டன் ஹோல்டா், ரோஸ்டன் சேஸ் தவிா்த்து மற்ற வீரா்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனா். கேப்டன் ஹோல்டா் 52 ரன்கள் எடுத்திருந்த நிலையில் உமேஷ் யாதவ் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தாா். ரோஸ்டன் சேஸ் 98 ரன்கள் சோ்த்து ஆட்டம் இழக்காமல் இருந்தாா்.

7 விக்கெட்டுகளை இழந்து 295 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்று தனது இரண்டாவது நாள் ஆட்டத்தை மேற்கு இந்திய தீவுகள் அணி தொடா்ந்தது. கூடுதலாக 16 ரன்கள் சோ்த்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சிறப்பாக விளையாடிய ரோஸ்டன் சேஸ் 106 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தாா். இறுதியில் 311 ரன்களுக்கு அந்த அணி ஆட்டம் இழந்தது.

இந்திய அணியை பொறுத்தளவில் உமேஷ் யாதவ் 6 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் கைப்பறினா்.

இதனைத் தொடா்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது. இந்திய அணியில் இளம் நாயகனாக இணைந்துள்ள பிரித்வி ஷா 39 பந்துகளில் அரைசதம் கடந்து எதிரணி பந்து வீச்சாளா்களை திணறடித்து வருகிறாா்.

கார்ட்டூன் கேலரி