2வது டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்சில் 283 ரன்கள் எடுத்த இந்திய அணி 43 ரன்களுக்கு பின்னிலை

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 283 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணியை காட்டிலும் இந்திய அணி 43 ரன்கள் பின் தங்கியுள்ளது.

2nd-test-match

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றாத இந்திய அணி 70 ஆண்டுகளுக்கு பிறகு முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்யாசத்தில் வெற்றிப்பெற்று சாதனை படைத்துள்ளது.

இதையடுத்து இரு அணிகளும் பங்கேற்கும் 2வது டெஸ்ட் தொடர் பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதனால் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 326 ரன்கள் எடுத்தது. இதில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் 70 ரன்கள் எடுத்திருந்தார். இதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சின் 2வது நாள் முடிவில் 3விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் சேர்த்திருந்தது.

இதையடுத்து 3வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் விராட் கோலில் தனது 25வது சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் குறைவான போட்டில் 25வது சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் கோலி இரண்டாம் இடம்பிடித்துள்ளார். இவரை தொடர்ந்து 3வது இடத்தில் சச்சின் உல்ளார். அதுமட்டுமின்றி கோலி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தனது 7வது சதத்தை பூர்த்தி செய்துல்ளார். ரஹானே அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து கோலி 123 ரன்களில் வெளியேற, இறுதியில் அதிரடி காட்டிய ரிஷப் பண்ட் 36 ரன்களை மட்டுமே சேர்த்தார். இதனை தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 283 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. இதனால் இந்திய அணி 43 ரன்கள் பின் தங்கியுள்ளது.

இதையடுத்து ஆஸ்திரேலிய அணி தனது தனது 2வது இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது.