2வது டெஸ்ட் – முதல் நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்த பாகிஸ்தான்!

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யும் பாகிஸ்தான் அணி, முதல் நாள் முடிவில் 5 விக்கெட்டுகளுக்கு 126 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.

துவக்க வீரர் ஷான் மசூத் 1 ரன்னில் அவுட்டாக, மற்றொரு துவக்க வீரர் அபிட் அலி 60 ரன்களில் அவுட்டானார். அஸார் அலி 20 ரன்களும், அசாத் ஷஃபீக் 5 ரன்களும் அடித்தனர். ஃபவாத் ஆலம் டக்அவுட் ஆனார்.

அதிரடி வீரர் பாபர் ஆஸம் 25 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

இங்கிலாந்து தரப்பில் மூத்த பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளும், ஸ்டூவர்ட் பிராட், சாம் கர்ரன் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர்.