2வது டெஸ்ட் போட்டி: ரோஹித் சர்மா, அஸ்வின் மற்றும் பிரித்வி ஷாவிற்கு ஓய்வு!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டி20 போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ரோஹித் சர்மா, அஸ்வின் மற்றும் பிரித்வி ஷாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

ashwin

ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. டி20 போட்டிகள் கடந்த மாதம் முடிந்த நிலையில், முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் சொந்த மண்ணில் விளையாடிய ஆஸ்திரேலிய 31 ரன்கள் வித்யாசத்தில் இந்தியாவிடம் வெற்றிப்பெறாமல் தோல்வியை தழுவியது.

முதல் டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் சுமார் 70 ஆண்டுகளுக்கு பின் சொந்த மண்ணில் விளையாடிய ஆஸ்திரேலியாவை முதல் டெஸ்ட் தொடரில் வென்ற பெருமையை இந்தியா பெற்றது. இதையடுத்து 2வது டெஸ்ட் போட்டி நளை பெர்த் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த ஆடுகளும் இந்திய அணி வீரர்களை காட்டிலும், ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு சாதகமாகவே அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் 13 வீரர்கள் கொண்ட இந்திய அணியின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், கே எல் ராகுல், புஜாரா, அஜின்க்ய ரகானே, ஹனுமா விஹாரி, ரிசப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஸ்வர் குமார் மற்றும் உமேஷ் யாதவ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த தொடரில் பிரித்வி ஷா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரோகித் சர்மா ஆகியோருக்கு காயம் காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பதிலாக, ஹனுமா விஹாரி, ரவீந்திர ஜடேஜா மற்றும் புவனேஸ்வர் குமார் சேர்க்கப்பட்டுள்ளனர்.