மணிப்பூர், இமாச்சலப்பிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம்: அசாமிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாக தகவல்

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் இன்று 3.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதிகாலை 2.43 மணியளவில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் மாநிலத்தில் பழங்குடியினர் வாசிக்கும் மாவட்டமான லஹால்-ஸ்பிட்டியில் ஏற்பட்டது என்று தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் மையப்பகுதியானது சிம்லா மாவட்டத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் ஆழம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தால் இதுவரை எந்த விதமான சேதமும், பாதிப்புகளும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மணிப்பூரிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும் அதன் அதிர்வுகள் அசாமிலும் எதிரொலித்ததாகவும் நிலநடுக்கவியல் மையம் கூறி உள்ளது.