முதல்வர் குறித்த போலி புகைப்படம் வெளியிட்ட மூவர் கைது

பினராயி

ரு காவல் நிலையத்தில் கேரள முதல்வர் விருந்து உண்பது போன்ற போலி புகைப்படத்தை பரப்பிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கேரள முதல்வர் பிணராயி விஜயனின் சொந்த ஊரின் பெயர் பிணராயி ஆகும்.    அங்கு அவர் காவல் நிலையத்தில் உட்கார்ந்து வாழை இலையில் விருந்து உண்ணுவதைப் போல புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியது.   அத்துடன் அவர் உணவு உண்ணும் போது சுற்றி காவல்துறை உயர் அதிகாரிகள் பார்த்துக் கொண்டு உள்ளதைப் போலவும் அந்த புகைப்படத்தில் காணப்பட்டது.

இந்த புகைப்படம் பலராலும் பதியப்பட்டு வைரலாகியது.  அதை ஒட்டி இந்த புகைப்படத்தில் காணபடும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.   அப்போது இந்தப் புகைப்படம் போலி என கண்டறியப்பட்டது.   சில நாட்களுக்கு முன்பு பிணராயி பகுதியில் முதல்வர் ஒரு புதிய காவல் நிலையத்தை திறந்து வைத்தார்.   அப்போது அங்கு காவல்துறை வருகையாளர் புத்தகத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

அந்த நிகழ்வு புகைப்படம் ஆக்கப் பட்டுள்ளது.   அதை யாரோ விஷமிகள் முதல்வர் அதிகாரிகளை நிற்க வைத்து காவல் நிலையத்தில் உணவு உண்பதைப் போல சித்தரித்தது கண்டறியப்பட்டது.   மேலும் சைபர் கிரைம் உதவியுடன் இவ்வாறு மாற்றப்பட்ட புகைப்படத்தை பரப்பியவரக்ளை கேரள காவல்துறையினர் கண்டு  பிடித்துள்ளனர்.

மாத்தனூர் பகுதியை சேர்ந்த முகமது மற்றும் மாதேஷ் அத்துடன் அஞ்சாரக்கண்டி பகுதியை சேர்ந்த சஜித் குமார் ஆகியோரை இது தொடர்பாக கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Thanx to : THE NEWS MINUTE