க்ரா

டையில் விழுந்த பசுவை காத்த 3 காவல்துறையினருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

உத்திரப் பிரதேசத்தில் பசுப்பாதுகாப்புக்கு அம்மாநில அரசு முக்கியத்துவம் அளித்து வருவது தெரிந்ததே. அரசு ஆதரவற்று திரியும் கால்நடகைகளை காக்க பல பாதுகாப்பகங்கள் அமைத்துள்ளது. இந்த பாதுகாப்பகத்தில் ஒவ்வொரு பசுவை பாதுகாக்கவும் தலா ரூ.30 செலவிடப்படுகிறது. இதனால் அரசுக்கு மாதத்துக்கு ரூ.1,80,000 செலவாகிறது.

ஆக்ரா பகுதியில் ஓடும் ஒரு நீரோடையில் ஆதரவின்றி திரியும் பசு ஒன்று விழுந்து விட்டது. அதை காக்க அந்தப் பகுதி மக்கள் அந்த பசுவை வெளிக்கொணர முயன்றும் முடியவில்லை. அதை ஒட்டி அவசர உதவி எண்ணான 100 பிரிவில் பணி புரியும் தலைமைக் காவலர் தேஷ்ராஜ் சிங், ஊர்க்காவலர்கள் ஜிதேந்திர குமார் மற்றும் சுரேந்திர குமார் ஆகியோர் அங்கு ரோந்தில் ஈடுபட்டிருந்தனர்.

அவர்களிடம் அந்த பகுதி மக்கள் முறையிட்டுள்ளனர். உடனடியாக நீரோடைக்கு விரைந்த மூன்று காவலர்களும் ஊர் மக்கள் உதவியுடன் பசுவை காக்க முயன்றுள்ளனர். அது முடியாததால் அந்தக் குளிர்ந்த நீரில் இறங்கி பசுவை கட்டி அதைத் தங்கள் வாகனம் மூலம் வெளியே இழுத்துள்ளனர். வெளியில் வந்த பசு குளிரால் நடுங்கியபடி இருந்ததால் அந்த பசுவை துடைத்து உடலில் சூடு ஏற்றி நடுக்கத்தை போக்கி உள்ளனர்.

இதனால் மகிழ்ந்த அந்த பகுதி மக்கள் அவர்களுகு புகழாரம் சூட்டி உள்ளனர். அதன் பிறகு நேற்று ஒரு விழா நடத்தி இந்த மூன்று காவல்துறையினருக்கும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.