சுய உதவிக்குழுக்கள் மூலம் 3 கோடி முகக்கவசங்கள் தயாரிப்பு… நிதி அமைச்சர் பெருமிதம்

டெல்லி:

12 ஆயிரம் ச சுய உதவிக்குழுக்கள் மூலம் 3 கோடி முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளதாக நிதி அமைச்சர் பெருமிதம் தெரிவித்து உள்ளார்.

பொருளாதார மேம்பாட்டுக்கான ரூ.20 லட்சம் கோடி  சிறப்பு திட்டத்திற்கான முதல்கட்ட அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்ட நிலையில், இன்று 2வது கட்ட அறிவிப்புகளை  வெளியிட்டு வருகிறார். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், சிறு விவசாயிகள், நடைபாதை வியாபாரிகள் ஆகியோருக்கான  முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,  நாட்டில்உள்ள 12,000 சுயதொழில் குழுக்கள் 3 கோடி முகக் கவசம் (மாஸ்க்)  தயாரிக்கப்பட்டுஉள்ளது.

மேலும், 1லட்சத்து 20000 லிட்டர் சனிடைசர் களை இந்த சுய உதவிக்குழுக்கள் தயாரித்துள்ளது