டெல்லி:

லங்கையில் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட கோத்தபய ராஜபக்சே 3 நாள் அரசுமுறை பயணமாக இன்று டெல்லி வருகிறார்.  குடியரசுத் தலைவர, பிரதமர் உள்பட அமைச்சர்கள், அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார்.

இலங்கையில் நடைபெற்ற  அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்று நாட்டின் அதிபராக பதவி ஏற்றார். இதையடுத்து, பிரதமர் ரணில் விக்கிமசிங்க தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மகிந்த ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றார்.

இந்த நிலையில், இலங்கை அதிபரான  கோத்தபய ராஜபக்சேவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார்.  மோடியின் அழைப்பை ஏற்று, 3 நாட்கள் அரசு முறைப்பயணமாக கோத்தபய ராஜபக்சே இன்று இந்தியா வருகிறார்.

கோத்தபய, இங்கு  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து  ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும், இலங்கை அதிபர் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார்.