ஹாங்காக்

நாளை ஜனநாயக உரிமை கோரி போராட்டம் நடத்த இருந்த ஆர்வலர்கள் ஜோஷுவா வாங், ஆண்டி சான், மற்றும் அக்னெஷ் சவ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றச்சாட்டுக்கு ஆளாகும் ஹாங்காங் வாசிகள் விசாரணைக்காகச் சீனாவுக்கு நாடு கடத்தப்படுவார்கள் என்னும் மசோதா அறிவிக்கப்பட்டது.   இதையொட்டி அங்கு கடும் போராட்டம் எழுந்தன.   போராட்டங்களின் விளைவாக மசோதா  கிடப்பில் போடப்பட்டது.  ஆயினும் ஹாங்காங்கில் ஜனநாயக உரிமைகள் கோரி தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன.

இந்த போராட்டங்கள் தொடர்பாகக் கடந்த ஜூன் மாதம் முதல் 650 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  நாளை ஜனநாயக உரிமை கோரி போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கபடுள்ளது. இந்த போராட்டத்தை முன் நின்று நடத்த உள்ள ஆண்டி சாண் நேற்று இரவு ஜப்பானுக்குச் செல்ல ஹாங்காங் விமான நிலையம் சென்றார்.  அங்கு அவர் கைது செய்யபட்டுள்ளார்.

நேற்றிரவு மற்றொரு ஜனநாயக ஆர்வலர் அக்னெஷ் சவ் கைது செய்யப்பட்டதை அடுத்து ஹாங்காங்கில் கடும் பதட்டம் நிலவியது.  இந்நிலையில் இன்று பட்டப்பகலில் மற்றொரு ஜனநாயக ஆர்வர் ஜோஷுவா வாங் கைது செய்யப்பட்டுள்ளார்.  இவரை வலுக்காடாயமாக ஒரு வேனில் காவல்துறையினர் ஏற்றிச் சென்றுள்ளனர்.