காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூர் ஹுண்டாய் கார் தொழிற்சாலையில் 3 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.

நாடெங்கும் கொரோனா பரவுதல் அதிகமானதால் அதை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலாக்கப்பட்டது.  ஆயினும் பாதிப்பு குறையாததால் மேலும் மூன்று முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.  தற்போது நடந்து வரும் நான்காம் கட்ட ஊரடங்கில் பல விதிகள் தளர்த்தப்பட்டு தொழிற்சாலைகளை 50% ஊழியர்களுடன் இயக்கலம என மத்திய மாநில அரசுகள் அறிவித்தன.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய கார் தொழிற்சாலையான ஹுண்டாய் கார் தொழிற்சாலை அமைந்துள்ளது. கடந்த 8 ஆம் தேதி முதல் இந்த தொழிற்சாலை செயல்படத் தொடங்கியது.  தொழிற்சாலையில் அரசு அறிவித்த நிபந்தனை மற்றும் கட்டுப்பாடுகளுடன் சமூக இடைவெளியைப் பின்பற்றி ஊழியர்கள் பணி  புரிந்து வந்தனர்.

ஹுண்டாய் கார் தொழிற்சாலையில் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது.   அதில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது..  அவர்கள் மூவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.    அத்துடன் ஊழியரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.   இது ஊழியர்களிடையே கடும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.

ஏற்கனவே சமீபத்தில் மாருதி கார் தொழிற்சாலையில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட்து குறிப்பிடத்தக்கது.