Random image

சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து: 3 பேர் பலி

  சிவகாசி:

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பகுதியில் பட்டாசு தயாரிக்கும் அலையில் திடீர் வெடிவிபத்து நடைபெற்றது. இதில் 3 பேர் தீயில் கருகி பலியாகினர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள காக்கிவாடன்பட்டியில் பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் தயாரிக்கும் பணி இரவு பகலாக மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இதில் பட்டாசு ஆலை ஒன்றில்  இன்று காலை திடீரென வெடிவிபத்து எற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதில் திடீர் வெடி விபத்தில் சிக்கி அந்த  பட்டாசு ஆலையில் வேலை செய்த 3 பேர் உயிரிழந்துள்ளனர் என முதல்கட்டத் தகவலில் தெரிந்துள்ளது. மேலும் பலர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.