வாஷிங்டன்

மெரிக்காவின் சிறந்த 80 பெண் சுய தொழில் முனைவர் பட்டியலில் 3 இந்திய வம்சாவழி பென்கள் இடம் பெற்றுள்ளனர்.

ஜெயஸ்ரீ உள்ளல்

பிரபல ஆங்கில பத்திரிகையான ஃபோர்ப்ஸ் பத்திரிகை அமெரிக்காவின் 2019 ஆம் வருடத்தின் சிறந்த 80 பெண் சுய தொழில் முனைவர் பட்டியலை வெளியிட்டுள்ளது.   இது அவர்களின் தொழில் வருமானத்தை கணக்கிடப்பட்டு வெளியாகி உள்ளது.    அத்துடன் புதிய தொழில் கண்டுபிடிப்பு நிகழ்த்தியோர், தொழில் சாதனை ஆகியவைகளும் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன

இதில் மூன்று இந்திய வம்சாவழியை சார்ந்த பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.   இவர்கள் அரிஸ்டா நெட்வொர்க்ஸ் தலைவர் ஜெயஸ்ரீ உள்ளல், சிண்டெல் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் நீரஜா சேத்தி மற்றும் கன்ஃப்ளுயண்ட் நிறுவன தலைவர் நேகா நார்கேட் ஆகியோர் ஆவார்கள்

இந்த பட்டியலில் முதல் இடத்தில் ஏபிசி சப்ப்ளை நிறுவன தலைவர் டியேன் ஹெண்ட்ரிக்ஸ் உள்ளார்.

ஜெயஸ்ரீ உள்ளல் இந்த பட்டியலில் 18 ஆ,ம் இடத்தில் உள்ளார்.  இவர் லண்டனில் பிறந்து இந்தியாவில் வளர்ந்து அமெரிக்காவின் மிக செல்வந்தர்களில் ஒருவர் என ஃபோர்ப்ஸ் வர்ணித்துள்ளது.   தற்போது 54 வயதாகும் இவருக்கு 1500 கோடி டாலர் மதிப்புக்கு சொத்து  உள்ளது.

நீரஜா சேத்தி இந்த பட்டியலில் 23 ஆம் இடத்தில் உள்ளார்.   இவர் தனது இல்லத்தில் கடந்த 1980 ஆம் வருடம் தனத் கணவர் பரத் தேசாய் உடன் இணைந்து $ 2000 முதலீட்டில் சிண்டெல் நிறுவனத்தை தொடங்கி உள்ளார்.  தற்போது 64 வயதாகும் நீரஜாவுக்கு 1000 கோடி டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.

நேகா நார்கேட் இந்த பட்டியலில் 60 ஆம் இடத்தில் உள்ளார்.  இவருக்கு தற்போது 34 வயதாகிறது.  இவருடைய வாடிக்கையாளர்களில் நெட்ஃப்ளிக்ஸ், ஊபெர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள்.  இவருக்கு தற்போது 250 கோடி டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.