காஷ்மீரில் கடத்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் 3 பேர் கொலை: பயங்கரவாதிகள் அட்டூழியம்

--

ஸ்ரீநகர்:

ம்மு காஷ்மீர் மாநிலம் சோபியானில் 3 சிறப்பு போலீஸ் படை அதிகாரிகள், 1 காவலர் உள்பட 4 பேர்  திடீரென மாயமானார்கள். அவர்கள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது.

இந்த நிலையில் கடத்தப்பட்ட சிறப்பு காவல்படை அதிகாரிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்ததுள்ளது. ஹிஸ்புல் முஜாஹதின் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் அவர்களை கடத்தி கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக பயங்கரவாதிகளின் நடவடிக்கை அதிகரித்து உள்ளது. அவர்களை இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினர் வேட்டையாடி வருகின்றனர். இருந்தாலும் புற்றீசல் போல அவர்கள் வந்துகொண்டே இருக்கின்றனர்.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த  3 சிறப்பு போலீஸ் படை அதிகாரிகள், மற்றும் 1 காவலர் திடீரென மாயமானார்கள். அவர்கள் பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பபட்டிருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில், கடத்தப்பட்டவர்களில் 3 பேர் கொல்லப்பட்டிருந்தது தெரிய வந்ததுள்ளது.

சமீபத்தில்,  ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் வீடியோக்களை வெளியிட்டு காவல்துறையினருக்கு எச்சரிக்கை விடுத்தனர். அதில் மாநிலத்தை சேர்ந்த போலீஸார் ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது கொல்லப்பட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த நிலையில் காவலர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே கடந்த மாதம் முன்னதாக ஆகஸ்ட் 30ம் தேதி பயங்கரவாதிகளின் உறவினர்கள் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.அவர்களை விடுவிக்கும்படி ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பு  கோரிக்கை வைத்துள்ளது. காவல்துறை அதற்கு மறுக்கவே, 3 போலீசாரை கடத்தியதாக கூறப்படுகிறது.