அமிர்தசர்ஸ் அருகே குண்டு வெடிப்பு : மூவர் மரணம்

மிர்தசரஸ்

ஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள ஒரு இடத்தில் பிரார்த்தனை கூட்டத்தில் நடந்த குண்டு வீச்சு தாக்குதலில் மூவர் மரணம் அடைந்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள அமிர்தசரஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் அதிவாலா. இங்கு திர்ன்காரி பில்டிங் என ஒரு பெரிய கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் ஞாயிறு தோறும் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடப்பது வழக்கம். அதற்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள்.

இன்று நடந்த பிரார்த்தனையில் சுமார் 500 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த சில மர்ம நபர்கள் கட்டிடத்தின் மீது வெடிகுண்டுகளை வீசி எறிந்தனர். அதன் பிறகு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். வீசப்பட்ட வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறின.

இதில் மூத்த காவல் துறை அதிகாரி சுரேந்தர் சிங், பால்சிங், பார்மர் ஆகிய மூவர் மரணம் அடைந்தனர். சுமார் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலரும் காயமடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

முகத்தை மறைத்த்படி பைக்கில் வந்தவர்கள் குண்டுகளை வீசி சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறி உள்ளனர். இதுவரை யார் குண்டு வீசியது எனவும் எதற்காக குண்டு வீசப்பட்டது என்பது குறித்தும் தெரியவில்லை. பஞ்சாப் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் மரணம் அடைந்தவர்கலுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துளார். அத்துடன் மரணம் அடைந்தோர் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

You may have missed