ஜப்பானில் கடும் நில நடுக்கம் : மூவர் மரணம்

டோக்யோ

ப்பானின் மேற்கு பகுதியில் நில நடுக்கம் எற்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  ஜப்பானின் மேற்கு பகுதியன ஒசாகோ, கியோடா பகுதியில் இந்த நிலநடுக்கம் காணப்பட்டுள்ளது.   இதனால் வீடுகள் குலுங்கி ஜன்னால் கண்ணாடிகளும் சில இடங்களில் கான்கிரீட் தூண்களும் உடைந்துளன.   ஜப்பான் நேரப்படி காலை 8.30 மணிக்கு இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

முதலில் ரிக்டர் அளவில் 5.9 என சொல்லப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 என பதிவாகி உள்ளதாக ஜப்பான அரசு அறிவித்துள்ளது.    இந்த நிலநடுக்கத்தால் ஒசாகா பகுதியில் இரு முதியவர்களும் ஒரு 8 வயது சிறுமியும் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல இடங்களில் நிலநடுக்கத்தால் மின் கசிவு உண்டாகி தீ பிடித்துள்ளது.   மேலும் சேதம் உண்டாவதை தடுக்க புல்லட் ரெயில் உள்ளிட்ட் அனைத்து ரெயில் சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

சொத்துக்களின் சேத விவரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.