Random image

ஊறுகாய் தயாரிக்கும் தொட்டிக்குள் விழுந்த தந்தை, மகன் உள்பட 3 பேர் பலி

லக்னோ:

ஊறுகாய் தயாரிக்கும் தொட்டியில் விழுந்த தந்தை, மகன் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உத்திரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் ரசாயனம் கலந்த காய்கறிகள் தொட்டியில் இருந்தது. ஊறுகாய் தயாரிப்பதற்கு தயாராக இருந்தது.
அப்போது ரசாயனம் கலந்த தொட்டியை எட்டிப்பார்த்த போது நெடியால் பாதிக்கப்பட்டு தொழிற்சாலை உரிமையாளரும், அவரது மகனும் தொட்டிக்குள் மயங்கி விழுந்துள்ளனர்.

அவர்களை காப்பாற்ற தொட்டிக்குள் இறங்கிய தொழிலாளியும் மயங்கி விழுந்தார். தொட்டிக்குள் விழுந்த உரிமையாளர், அவரது மகன், ஒரு தொழிலாளர் என 3 பேரும் உயிரிழந்தனர்.

தகவலறிந்த போலீசார் விரைந்தது வந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த ஊறுகாய் ஆலை அனுமதி இன்றி செயல்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.