3லட்சம் அகல்விளக்குகள்: கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த தீபாவளி

--

லக்னோ:

தீபாவளி பண்டிகையையொட்டி  உத்தரபிரதேசம் மாநிலத்தில் 3 லட்சம் அகல் விளக்குகளை ஏற்றி மக்கள் சிறப்பாக கொண்டாடினர். இதன் காரணமாக  தீபாவளி கொண்டாட்டம், கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது.

நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில்,  உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் 3 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி தீபாவளி பண்டிகை சிறப்பிக்கப்பட்டது.

முன்னதாக  கடந்த 4ம் தேதி முதல் 6 ம் தேதி மூன்று நாட்கள் தீப உற்சவம் நடைபெற்று வந்தது. டஅதைத் தொடர்ந்து, நேற்றிரவு அயோத்தி நகர் சரயு நதிக்கரையில் 3,01,152 அகல் விளக்குகளை ஏராளமான மக்கள் ஒன்றிணைந்து  ஏற்றி மகிழ்ச்சியுடன் தீப ஒளி கொண்டாட்டங்களை கொண்டாடினார்.

இந்த எழில்மிகு விழாவில், உ.பி. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்,  இந்தியா வந்துள்ள தென்கொரியா அதிபரின் மனைவி உள்பட பல்லாயிரக்கான மக்கள் பங்கேற்றனர்.  இந்த நிகழ்ச்சி  கின்னஸ் சாதனையாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கான கின்னஸ்  சான்றிதழை உத்திரபிரதேச மாநில முதலமைச்சர் யோகியிடம்  கின்னஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் வழங்கினர்.