ஜாகிர் நாயக்கிற்கு மலேசிய குடியுரிமை…3 அமைச்சர்கள் எதிர்ப்பு

கோலாலம்பூர்:

பங்களாதேஷின் டாக்காவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிரபல இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சு தூண்டுகோலாக இருந்தது என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனால் அவரை கண்காணிக்க இந்திய அரசை பங்களாதேஷ் அரசு கேட்டுக்கொண்டது.ஜாகிர் நாயக் மீது மதங்களுக்கு இடையே பகைமையை தூண்டியதாக தேசிய புலனாய்வு முகமை வழக்கு பதிவு செய்தது.

இந்தியாவில் ஜாகிர் நாயக் இஸ்லாமிக் ஆய்வு மையத்துக்கு தொடர்புடைய 10 இடங்களிலும் சோதனை நடந்தது. ஆய்வு மையத்துக்கு 5 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டது. தேடப்படும் நபர்களை ஒப்படைக்க இந்தியா – மலேசியா இடையிலான ஒப்பந்தத்தின் படி ஜாகிர் நாயக்கை ஒப்படைக்க மலேசிய அரசை இந்திய அரசின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஜாகிருக்கு மலேசிய அரசு அடைக்கலம் கொடுத்துள்ளது. அவருக்கு குடியிரிமை அளிக்கப்பட்டதற்கு மலேசியா அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கு 3 அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

‘‘ஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைப்பதா வேண்டாமா? என்று பிரதமர் மட்டுமே தீர்மானிக்க முடியாது. நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்’’ என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் குலசேகரன் நிருபர்களிடம் தெரிவித்தார். இதேபோல், மலேசிய அமைச்சர்கள் கோபிந்த் சிங் டியோ, ஜேவியர் ஜெயக்குமார் ஆகியோரும் ஜாகிர் நாயக்கை நாடு கடத்தும் விவகாரத்தில் மலேசிய பிரதமர் மஹதிர் முகமதுவின் கருத்துக்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

You may have missed