சென்னை:
பிளஸ் 2 வேதியியல் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு போனசாக 3 மதிப்பெண்கள் வழங்கப்படும் என தமிழக அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடந்து முடிந்தது. ஊரடங்கு உத்தரவால் விடைத்தாள் திருத்தும் பணி தள்ளி வைக்கப்பட்டது. தற்போது விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஜூன் இறுதியில் தேர்வு முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், பிளஸ்2  பொதுத்தேர்வில் வேதியியல் பாடத்தை தமிழ் வழியில் எழுதிய மாணவர்களுக்கு கூடுதலாக 3 மதிப்பெண்கள் போனஸாக வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
வேதியியல் பாடத்தின் தமிழ் வினாத்தாளில்  மொழிபெயர்ப்பு தவறாக இருந்ததாகவும், “புரதம்” எனும் தமிழ்ச்சொல்லுக்கு பதிலாக “ப்ரோடீன்” என ஆங்கிலத்தில் கேட்கப்பட்டதால், மாணவர்களுக்கு 3 மதிப்பெண்களை கூடுதலாக வழங்கப்படுமென அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.