சென்னை:

மிழகத்தில் மேலும் 3 சட்டக் கல்லூரிகள் புதிதாக தொடங்கப்படும் என்று சட்டமன்றத்தில் விதி 110ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார் .ஏற்கனவே உள்ள சட்டக்கல்லூரிகள் மேம்பாட்டிற்கும் நிதி ஒதுக்கப்படுவதாகவும் தெரிவித்து உள்ளார்.

தமிழக சட்டமன்ற பேரவை மானிய கோரிக்கை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தின்போது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  விதி 110ன் கீழ் பல்வேறு அறிவிப்பு களை வெளியிட்டார்.

வழக்கம் போல் இன்று காலை 10 மணிக்கு சட்டமன்றம் கூடியது. அதையடுத்து, கேள்வி நேரம் நடைபெற்றது. அதில் நீட் தொடர்பாக ஸ்டாலின் கொண்டு வந்த சிறப்பு தீர்மானம் குறித்து காரசாரமாக விவாதம் நடைபெற்றது. அதையடுத்து, இதையடுத்து சமூக நலம், சத்துணவு திட்டத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறற்றது.  இதில் உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, அமைச்சர் சரோஜா பதில் அளித்து பேசினார்.

இந்த நிலையில் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் தல்வர் எடப்பாடி பேசினார். அதில்,

தமிழகத்தில் புதிதாக மூன்று சட்டக் கல்லூரிகள் தொடங்கப்படும். இதற்காக ரூ.9.58 கோடி ஒதுக்கப்படும்.

இந்த கல்லூரிகள் வரும் 2019-20 கல்வியாண்டு முதல் தொடங்கப்படும். திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரிக்கு ரூ.7.70 கோடி செலவில் கூடுதல் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும்.

ரூ.318 கோடி செலவில் 10,000 தடுப்பணைகள், ரூ.1,200 கோடி மதிப்பில் ஊரக சீரமைப்பு போன்றவை மேற்கொள்ளப்படும்

ஏற்கனவே இருக்கும் சட்டக் கல்லூரிகள் உள்ள மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் புதிய சட்டக் கல்லூரிகள் அமைக்க திட்டமிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரத்தில் சட்டக் கல்லூரி தொடங்கப்பட்டது. இதற்கான சேர்க்கை நடைபெற்று, கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ஏற்கனவே 13 அரசு சட்டக் கல்லூரிகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.