காஸா:

காஸா எல்லை பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பாலஸ்தீனியர்கள் உயிரிழந் துள்ளனர்.

இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்துள்ள   தங்களின் சொந்த வீடுகளில் குடியேற வேண்டும் என்று வலியுறுத்தி பாலஸ்தீனம் இஸ்ரேல் எல்லை பகுதியான  காஸா முனையில் பாலஸ்தீனியர்கள் போராடி வருகின்றனர்.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அந்த பகுதியில் தங்கியுள்ள பாலஸ்தீனிய மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்கள் பூர்வீக இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கக் கோரி இஸ்ரேல்-பாலத்தீன எல்லையில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள்மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூடு நடத்தி அவர்களை கலைத்து வருகிறது.

நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது, பாலத்தீனத்தைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், அப்போது நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பாலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப் பட்டதாகவும், ஏராளமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே கடந்த வாரம் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.