எம்.பி.பி.எஸ் ‘சீட்’ மோசடி….3 பேர் கைது

டில்லி:

இந்தியா முழுவதும் கடந்த 6ம் தேதி 136 நகரங்களில் 2 ஆயிரத்து 255 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. சுமார் 13 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், நீட் தேர்வு எழுதியவர்களிடம் எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாக கூறி சிலர் மோசடி செய்திருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து சிபிஎஸ்இ அளித்த புகாரின் பேரில் மோஹித் குமார், மனோஜ் குமார், அஷ்வானி தோமர் ஆகிய 3 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.