காஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 3 பேர் பலி

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 3 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெடிவிபத்து காரணமாக தீ பற்றி எரியும் காட்சி

காஞ்சிபுரத்தில் உள்ள நாகலு தெருவில் உள்ள முஸ்தக் என்பவர் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக குண்டு வெடித்து பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

இந்த தீயில் சிக்கி , வெடிகுண்டுகள் தயார் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயில் சிக்கி பலியானவர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேரும், அனுமதி இல்லாமல் வெடிகுண்டு தயாரித்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கார்ட்டூன் கேலரி