பெண் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது!!

சண்டிகர்:

டெல்லியில் நிர்பயா கொல்லப்பட்டது போல் அரியானாவில் பெண் ஒருவர் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தலையில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, காரை ஏற்றி கொன்ற சம்பவம் நாட்டையே உலுக்கியது. இச்சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

இறந்த பெண்ணின் சடலத்தை பார்த்ததில் இருந்து அவரது தயார் உடைந்து, துயரத்தை சொல்ல முடியாது வேதனையில் தவிக்கிறார். அவருக்கு யாராலும் ஆறுதல் கூறமுடியவில்லை. சோகத்துடன் அந்த தாய் கூறுகையில், ‘‘இனி யாரும் பெண் குழந்தை பெற்றுக் கொள்ளாதீர்கள். யாருக்கு வேண்டுமென்றாலும் இதுபோன்ற கொடூரம் நடக்கும்.

அரசு பெண் குழந்தைகள் பிறப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கிறது. ஆனால் குண்டர்கள் அவர்களை கொன்று குவிக்கிறார்கள். இன்று நான் எதை பார்க்கின்றேனோ, அதனை தவிர்க்க வேண்டும் என்றால் யாரும் பெண் குழந்தையை பெற்றுக் கொள்ளாதீர்கள்’’ என தெரிவித்துள்ளார்.