புதுச்சேரியில் 3 அரசு பேருந்துகளுக்கு தீவைப்பு

புதுச்சேரி.

புதுச்சேரியில் 3 அரசு பேருந்துகள் மர்ம நபர்களால் தீ வைத்து எரித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உளளது.

புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ரவுடிகள் கோஷ்டி மோதல் காரணமாக 3 ரவடிகள் வெட்டிக் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற குற்றச்சாட்டையும் எதிர்க்கட்சியினர் எழுப்பி வருகின்றனர்.

அதைத்தொடர்ந்து குற்றவாளிகளை ஒடுக்க அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

அதேவேளையில், மாநில கவர்னர் கிரண்பேடிக்கும், அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில், நேற்று கவர்னர் கிரண்பேடி, அரசின் மழை வெள்ள முன்னேற்பாடுகள் குறித்து பாராட்டு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் புதுச்சேரி சுதேசி மில் அருகே மாநில போக்குவரத்துக் கழக பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 அரசு பேருந்துகள் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.

தீ வைத்த்து யார்,  தீ வைப்புக்கான காரணம் என்பது குறித்தும், அரசை இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ள இதுபோன்ற முயற்சிகளில் சமூக விரோதிகள் ஈடுபட்டார்களா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.