கருத்து கணிப்பு

டில்லி,

ந்தியாவில் உள்ள காலியாக உள்ள தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறும் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

தமிழ்நாடு, கேரளா, சிக்கியம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது தேர்தல் ஆணையம்.

அதன்படி தமிழ்நாடு, கேரளா  மற்றும் சிக்கிமில் ஏப்ரல் 12ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆனால் வாக்கு எண்ணிக்கை மட்டும் கேரளாவில் 17-4-17 அன்று எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு, கேரளா, சிக்கிம் மாநில இடைத்தேர்தல் விவரம்

வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் நாள்:  23-03-2017

மனுக்கள் பரிசீலனை: 24-03-17

வேட்பு மனுக்கள் திரும்பப்பெறும் நாள்: 27-03-17

தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நாள்: ஏப்ரல் 12 (12/04/2017)

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் : ஏப்ரல் 15  (15/04/2017) (தமிழ்நாடு , சிக்கிம் மட்டும்)

ஆனால்,

கேரளாவில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் : ஏப்ரல் 17 (17/04/2017) என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.