Random image

ஜம்மு.வில் ஊடுருவிய 3 பயங்கரவாதிகள் என்கவுண்ட்டரில் பலி

ஸ்ரீநகர்:

ஜம்மு நகர் காக்ரியா பகுதியில் பயங்கரவாதிகள் நேற்று ஊடுருவியதாக தகவல்கள் வெளியானது. கிராமவாசி ஒருவரது வீட்டில் இரவு நேரத்தில் புகுந்து வேறு உடையும், உணவும் கேட்டுள்ளனர். வாகனம் ஏற்பாடு செய்தால் பணம் தருகிறோம் என்றும் கூறியுள்ளனர்.

இது குறித்து கிராமவாசி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உஷாரான போலீசார் நக்ரோட்டா-ஜஜ்ஜார் கொத்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து ரத்து செய்தனர். பள்ளிகளும் இன்று மூடப்பட்டன. அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில் மத்திய ரிசர்வ் போலீசார், ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

ஆளில்லா விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலமும் தேடப்பட்டது. தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டை தொடங்கியது. அப்போது நடந்த என்கவுண்ட்டரில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 12 பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்தனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது.