காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்:
காஷ்மீரில் பதுங்கியிருந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

-காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக சிறப்பு பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அபாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி அதிநவீன இயந்திர துப்பாக்கிகளால் சுட்டனர்.

பாதுகாப்பு படையினர் திருப்பிச் சுட்டதில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையேதுப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. இத்தகவலை ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் கர்னல் ராஜேஷ் காலியா உறுதிபடுத்தியுள்ளார்.