3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் அதிரடி

ஸ்ரீநகர்:

ம்மு அனந்தநாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், எல்லை பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற பயங்கர துப்பாக்கி சண்டையில், 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினரும்,  பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளும் அவ்வப்போது எல்லை மீறி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள  ஹகுரா பகுதியில் பயங்கரவாதிகள் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, , பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்தை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக பாதுகாப்பு படையினர்மீது துப்பாக்கி சூடு நடத்தி பயங்கரவாதிகள் தப்பி செல்ல முயன்றனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் 2 பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மற்றொருவரை  அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாகவும், அவர்கள் தங்கி இருந்த வீட்டில்  இருந்து  ஏகே 47 துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள்,  குண்டுகள் ஏராளமான அளவில் வைக்கப்பட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 3 Terrorists Shot Dead, 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் அதிரடி, In Jammu And Kashmir
-=-