பாதுகாப்பற்றதா பதஞ்சலி நூடுல்ஸ்? மூன்று மடங்கு அதிகச் சாம்பல் !

ஏதாவது ஒருவகையில் சிக்கலைச் சந்தித்து வரும் பாபா ராம்தேவின் பதஞ்சலி பொருட்கள், தற்பொழுது மற்றொரு பிரச்சனையில் சிக்கியுள்ளது.

padhanali 0

மீரட்டில் அமைந்துள்ள உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை  பதஞ்சலி நூடுல்ஸ் மீது நடத்திய ஒரு ஆய்வில், சுவைக்கூட்டி கலவையில் அனுமதிக்கப் பட்ட அளவை விட மூன்று மடங்கு சாம்பல் அதிகமாக உள்ளது என கண்டறியப் பட்டுள்ளது.

padhanjali 00

இது மேகி நூடுல்சைவிட அதிகமாகும்.

கடந்த பிப்ரவரி  5 ம் தேதி சந்தையில் விற்கப் படும் பதஞ்சலி, மேகி, யுப்பி நூடுல்ஸ் களை ஆய்வுக்கு உட்படுத்தியதில், தற்பொழுது இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

மூன்று நூடுல்ஸ்களிலும், அனுமதிக்கப் பட்ட அளவை விட சாம்பல் கலப்பு அதிகமாக உள்ளது என ஆய்வின் முடிவில் கண்டறியப் பட்டுள்ளது.

padhanjali 000
சுவைக்கூட்டி கலவையில் சாம்பல் அதிகம்

கடந்த மாதம், பதஞ்சலி சுத்தமான பசுவின் நெய் என விற்கப் பட்ட நெய்யினைச் சோதனை செய்ததில், அதில் கலப்படம் இருப்பதும், ஆசிட் கலக்கப் பட்டதும் அம்பலமானது நினைவிருக்கலாம்.