முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்திற்கு 3 ஆண்டு சிறை!

சென்னை,

முன்னாள் அதிமுக அமைச்சர் அரங்கநாயகத்திற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவித்த வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

ஊழல் வழக்குகளுக்கான சிறப்பு நீதி மன்றம் இந்த அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது.

அரங்கநாயகம் 1991- 96ம் ஆண்டின் அதிமுக ஆட்சியின் போது கல்வித்துறை அமைச்சராக இருந்தார்.

அதைத்தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்தபோது, வருமானத்திற்கு மீறி  1.15 கோடி சொத்து குவித்துள்ளதாக அவர்மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் இன்று அவருக்கு 3 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதித்து நீதி மன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. அவரது மனைவி மற்றும் மகன் இருவரும்  வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர் தற்போது ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.