30/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை:

மிழகத்தில் இன்று புதிதாக 5,864 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட் டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் பாதிப்பு 2,39,978 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மேலும் 97 பேர் (அரசு மருத்துவமனை -65, தனியார் மருத்துவமனை -32) உயிரிழந்துள்ளனர். இதனால்  பலி எண்ணிக்கை 3,838 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 5,295 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 1,78,178 பேர் குணமடைந்துள்ளனர்.  தற்போதைய நிலையில்  57,962 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இங்கு  அதிகபட்சமாக 1,175 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 98,767 ஆனது.

தமிழகத்தில் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 1175 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் மீதமுள்ள  5,811 பேர் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், 53 பேர்  வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்.

வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5,424 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது/

வெளிநாடுகளில் இருந்து வந்த 807 பேர், உள்நாட்டு விமானங்களில் இருந்து வந்த 575 பேர், ரயில், பேருந்து, சொந்த வாகனங்கள் மூலம் வந்த 4042 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ரயில், விமானம், பேருந்து மற்றும் இதர வாகனங்களில் தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 4,62,131 -ஆக அதிகரித்துள்ளது.

தமிழக்தில் இன்று எந்த மாவட்டமும் தப்பாமல் 37 மாவட்டத்திலும் தொற்று உறுதி செய்யப்பட்டு அரசை நடுங்க வைத்துள்ளது.

மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு :

சென்னை – 1175

செங்கல்பட்டு – 354

திருவள்ளூர் -325

கோவை – 303

நெல்லை-277

ராணிப்பேட்டை-272

தேனி -261

குமரி -248

விருதுநகர் – 244

தூத்துக்குடி -220

மதுரை -220

தி.மலை – 187

வேலூர் -184

காஞ்சிபுரம் -175

கடலூர்-141

திண்டுக்கல்-138

புதுக்கோட்டை-128

திருச்சி – 118

தஞ்சை-97

விழுப்புரம் – 95

க.குறிச்சி-93

சிவகங்கை-75

சேலம்-70

தென்காசி-56

திருப்பத்தூர்-50

நாமக்கல்-48

ராமநாதபுரம்-46

கரூர்-41

நீலகிரி -33

திருப்பூர்-32

நாகை-28

பெரம்பலூர் -27

கிருஷ்ணகிரி-26

அரியலூர்-17

தர்மபுரி -16

ஈரோடு -12

திருவாரூர்-4