டெல்லி: இந்தியாவில் கொரோனாபாதிப்பு 35லட்சத்தையும், உயிரிழப்பு 63ஆயிரத்தையும் கடந்துள்ளதாக மத்தியசுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இணையதளத்தில் வெளியிட்டுள்ள (காலை 6 மணி நிலவரம்)   தகவலின்படி,  இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,39,712 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 78,479  பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று ஒரேநாளில் 943 பேர் கொரோனாவால்  மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 63,657 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று மட்டும் 64,982  பேர் குணமடைந்துள்ளனர். இதன் காரணமாக, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27,12,520 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 7,62,948 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில்,  நேற்று மட்டும்  16,286 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் மொத்த தொற்று பாதிப்பு  7,64,281 ஆக அதிகரித்துள்ளது.  தற்போதைய நிலையில்,  1,85,131 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் தொற்று பாதிப்பில் இருந்து  11,541 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை  5,54,711 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மேலும் 328 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு  24,103 ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து 2வது இடத்தில் தமிழகம் நீடித்து வருகிறது. அங்கு, நேற்று மட்டும்  6,352 பேருக்கு தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  4,15,590 ஆக உயர்ந்துள்ளது. 52,726 பேர் சிசிச்சையில் உள்ளதாகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை  3,55,727 ஆக உயர்ந்துள்ளதாகவும், பலி எண்ணிக்கை  7,137 ஆக அதிகரித்து உள்ளது.
3வது இடத்தில் ஆந்திர மாநிலம் உள்ளது. அங்கு மொத்த பாதிப்பு  4,14,164 ஆகவும், உயிரிழப்பு  3,796 ஆக உயர்ந்துள்ளது.
அதைத்தொடர்ந்து கர்நாடக மாநிலம் 4வது இடத்திலும், 5வது இடத்தில் உ.பியும் தொடர்ந்து வருகிறது.