கோரக்பூர்

த்திரப் பிரதேசத்தில் உள்ள பி ஆர் டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மீண்டும் 30 குழந்தைகள் உயிர் இழந்துள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம் உ.பி.  மாநிலத்தில் கோரக்பூரில் உள்ள பி ஆர் டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சுமார் 70 குழந்தைகள் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாததால் மரணம் அடைந்தனர்.    அது நாட்டையே உலுக்கியது.   அந்த சம்பவம் நடந்து சில நாட்களில் மற்றொரு துயரச் சம்பவம் அதே மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது.

சென்ற மாதம் மட்டும் இங்கு அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 30 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளன.  அதில் அக்டோபர் 9ஆம் தேதி மட்டும் 16 குழந்தைகள் இறந்துள்ளன.   இந்த மரணம் அனைத்தும் மூளைக்காய்ச்சலால் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.    மூளைக்காய்ச்சலால் குழந்தைகள் அதிகம் இறப்பது உ. பி.  மாநிலத்தில் என்பது ஏற்கனவே வெளி வந்த ஒரு தகவல் ஆகும்

உலக சுகாதார நிறுவனம்  மாசுபட்ட தண்ணீர் மூலம் மூளைக்க்காய்ச்சல் வைரஸ் அதிகம் பரவி உ. பி.  யில் உள்ள குழந்தைகளைத் தாக்குவதாக தெரிவித்துள்ளது.   இந்த தகவல் அளிக்கப்பட்டும் உத்திரப் பிரதேச அரசு மூளைக் காய்ச்சல் பரவுவதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என இங்குள்ள சமூக ஆர்வலர்கள் தங்களின் வருத்தத்தை தெரிவிக்கின்றனர்.