Random image

ஊர் சுற்றலாம்: நீங்கள் விசாவின்றி பயணம் செய்யக்கூடிய 30 நாடுகள் எவை ?

 

விசாவிற்கான அனைத்து ஆவணங்களின் செயல்முறையை நிறைவேற்ற  அலைய வேண்டும்,  நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டும் என்ற பயத்திலேயே பல முறை நீங்கள் இந்தியாவிலிருந்து சர்வதேச பயணம் மேற்கொள்ளும் யோசனையை தவிர்த்திருப்பீர்கள்.

Visa-On-Arrivalஆனால் இந்திய குடிமக்களின் வருகைக்குப் பின் விசா வழங்க குறைந்தது 30 நாடுகள் உள்ளன என்ற தகவல் நிச்சயம் தங்களுக்கு  மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

எனவே, நீங்கள் பயணத்தை முடிவு செய்து, பயணச் சீட்டு எடுத்து, பயணத்தை மேற்கொள்ள மட்டும் தயாராக இருந்தால் போதும். நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு விசா இன்றி சென்று, இலக்கை அடைந்த பின்னர் விசா பெற்று ஊர் சுற்றுங்கள்.

 

முப்பது நாடுகள் எவை என அறிந்துக் கொள்ள ஆர்வமாக உள்ளீர்களா ?

bhutan1

1. பூட்டான் ராஜ்ஜியத்திற்கு வந்து, அதன் வருகையின் போது விசா பெற்று, அதன் எழில்மிகு உயரமான இடங்களை கண்டுகளியுங்கள். இந்தியர்கள், பங்களாதேசியர்கள் மற்றும் மாலத்திவுகளின் பிரஜைகள், குறைந்தது 6 மாத காலத்திற்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டை காண்பித்து நுழைவு துறைமுகத்தில் 14 நாட்களுக்கு சுற்றுலா விசா பெற முடியும்.

2 hongkong

2. ஹாங்காங் வானளாவிய கட்டிடங்கள் மற்றும் பண்டைய மரபுகள் நிறைந்த நாடான ஹாங்காங் சுற்று தளங்களில் முக்கிய இடத்தை வகிக்கிறது. இந்தியர்கள் விசா இல்லாமல் 14 நாட்கள் வரை முறையான பயண ஆவணங்களோடு ஹாங்காங் நாட்டிற்குள் நுழைய முடியும்.

3 macau

3. மக்காவு சீன பாரம்பரியத்தை புரிந்து கொள்வதற்கான இலக்கு மக்காவு. இந்தியர்கள் இந்த நாட்டில் நுழைய, வருகையின் பின் 30 நாட்கள் விசா பெற முடியும்.

4 nepal

4. நேபால் இந்த அண்டைய நாடு உங்களுக்கு அழகிய இயற்கையின் சிறந்த காட்சிகளை வழங்குகிறது.1950 இந்திய-நேபால் சமாதானம் மற்றும் நட்புறவு ஒப்பந்த விதிமுறைகளின் கீழ் இந்திய குடிமக்கள் நேபாலில் சுதந்திரமாக வேலை செய்யலாம்.

seychelles

5. சீசெல்சு கடற்கரைகள், பவளப்பாறைகள், டைவிங், இயற்கை இருப்புக்கள் மற்றும் பெரிய அல்டாப்ரா ஆமைகள் போன்ற அரிய வனவிலங்குகள் இருப்பதாக அறியப்படுகிற இந்த தீவுக் கூட்டத்தை அவசியம் சென்று பாருங்கள். இந்தியர்கள் இந்த நாட்டில் ஒரு மாத காலத்திற்கு வருகையின் பின் விசா பெற முடியும்.

outh korea

6. தென் கொரியா (ஜெஜு தீவு மட்டும்) கொரியா நீரிணையில் உள்ள தென் கொரிய தீவான ஜெஜு, அதன் கிரேட்டர்கள் மற்றும் குகைபோன்ற எரிமலை குழாய்கள் கொண்ட எரிமலைகளுக்காக பிரசித்தி பெற்றது. தென் கொரியாவில் இந்த தீவு மட்டும் தான் இந்திய குடிமக்களுக்கு 30 நாட்களுக்கு வருகையின் போது விசா வழங்குகிறது.

maldives

7. மாலத்தீவு கடலுக்கடியிலுள்ள அழகை மாலத்தீவில் பாருங்கள். மாலத்தீவு விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்ததுமே, இந்தியர்களுக்கு சுமார் தொண்ணூறு நாட்கள் செல்லுபடியாகும் ஒரு இலவச மாலத்தீவு சுற்றுலா விசா வழங்கப்படுகிறது.

haiti 8

8. ஹெய்டி ஒரு கரீபியன் நாடான ஹைட்டி, அதன் கிழக்கில் டொமினிக்கன் குடியரசுடன் ஹிஸ்பானியோலா தீவை பகிர்கிறது. வருகையின் போது விசா எடுத்து 30 நாட்கள் இந்த நாட்டில் இந்தியர்கள் இருக்க முடியும்.

jamaica 9

9. ஜமைக்கா ஜமைக்கா அதன் கடற்கரைகள் மற்றும் அது உள்ளடக்கிய அனைத்து ரிசார்ட்டுகளுக்கும் நன்கு அறியப்பட்டது. வருகையின் போது விசா வசதியுடன் 30 இந்த நாட்டில் நுழையுங்கள்.

dominicia 10

10. டொமினிக்கா எழில்மிகு நாடான டொமினிக்காவை 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும் விசா மூலம் கண்டறியுங்கள்.

fiji 11

11. பிஜி ஒவ்வொரு கடற்கரையை காணவும் ஃபிஜி நாட்டிற்கு வாருங்கள். நீங்கள் வருகையின் போது விசா பெற்று 6 மாதங்களுக்கு இந்த நாட்டில் சுற்றலாம்.

thailand 12

12. தாய்லாந்து இன்று, நீங்கள் தாய்லாந்தை இந்தியாவிலிருந்து சாலை வழியாக கூட அடைய முடியும். இந்த நாடு விசா கட்டணமாக 1000 தாய் பாத் வசூலிக்கிறது. முதல் கட்ட நுழைவு / லேண்டிங் போது விசா எடுக்க வேண்டும், இறுதி இலக்கில் அல்ல. இந்தியாவிற்கு வெளியே இடங்கள் தேடும் போது, இந்திய தம்பதிகளுக்கு ஆசியாவில் உள்ள தேனிலவு இலக்காக தாய்லாந்து விரும்பப்படுகிறது.

mauritius

13. மொரிஷியஸ் இந்திய குடிமக்களுக்கு 14 நாள்கள் செல்லுபடியாகும் வருகையின் போது விசா பெற்று மொரிஷியஸின் அழகிய கடற்கரைகளை காணுங்கள்.

indonesia

14. இந்தோனேஷியா பல இயற்கை அதிசயங்களை கொண்டுள்ள இந்த தீவுக் கூட்டத்தை, வருகையின் போது 30 நாட்கள் செல்லுபடியாகும் விசா மூலம் விஜயம் செய்ய முடியும். 15. மைக்குரேனேசியா ஓசியானியாவின் இந்த துணைப் பகுதியை நீங்கள் 30 நாட்கள் செல்லுபடியாகும் வருகை விசா மூலம் பார்க்க முடியும்.

cape verde

16. கேப் வேர்ட் இந்த அம்பு வடிவ தீவான கேப் வேர்ட் தீவின் அழகை 30 நாட்கள் செல்லுபடியாகும் விசா வசதியைக் கொண்ட இந்தியர்கள் காண முடியும். 17. எக்குவடோர் அமேசான் காடு, ஆண்டியன் சமவெளிகள் மற்றும் வனப்பகுதி நிறைந்த கலாபாகோஸ் தீவுகள் போன்ற பல்வேறு இயற்கையான இடங்கள் நிறைந்த எக்குவேடாருக்கு வருகை தரும் இந்தியர்களுக்கு வருகையின் போது தரப்படும் விசா 14 நாள்கள் செல்லுபடியாகும்.

18 guyaba

18. கயானா அடர்ந்த காடுகள் நிறைந்த கயானாவின் அழகை பாராட்ட வரும் இந்தியர்களுக்கு 30 நாட்கள் செல்லுபடியாகும் விசா வழங்கப்படும்.

19 jordan

19. ஜோர்டான் வரலாற்று சிறப்புமிக்க இந்த நாட்டை நீங்கள் வ்ருகையின் போது விசா பெற்று 2 வாரங்கள் வரை சுற்றிப்பார்க்கலாம்.

20 laous

20. லாவோஸ் பிரம்மாண்டமான லாவோஸின் பேக்வாட்டர்ஸை இந்தியர்கள் 30 நாட்கள் செல்லுபடியாகும் வருகை விசா மூலம் காணலாம்.

21 saint lucia

21. செயிண்ட் லூசியா செயிண்ட் லூசியா அதன் கடற்கரைகள் மற்றும் பாறைகள்-டைவிங் தளங்கள் ஆகியவற்றிற்கு பெயர்போனது, அது மட்டுமல்லாது டோரைல் போன்ற நீர்வீழ்ச்சிகளினால் அதன் மழை காட்டுப்பகுதியும் பிரபலமானது. இந்த அழகை 6 வாரங்கள் செல்லுபடியாகும் விசா மூலம் காணலாம்.

22 senegal

22. செனகல் இந்த பிரஞ்சு காலனித்துவ பாரம்பரியத்தை, 30 நாள்கள் செல்லுபடியாகும் வருகையின் போது எடுக்கும் விசா மூலம் காணுங்கள். 23. டிரினிடாட் மற்றும் டொபாகோ பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திலிருந்தே டிரினிடாட் இந்தியர்களுக்கு இடம் கொடுத்துள்ளது. தென் அமெரிக்காவின் வடக்கு முனையில் உள்ள இந்த இரட்டை தீவு நாட்டை 90 நாட்கள் செல்லுபடியாகும் வருகையின் போது கிடைக்கும் விசா மூலம் கண்டுகளியுங்கள். 24. துவாலு இந்த பாலினேசியன் தீவு நீருக்கடியில் உள்ள அழகான உலகிற்கு தாயகமாக உள்ளது. இந்த தீவை 14 நாள்கள் செல்லுபடியாகும் விசா மூலம் காண வாருங்கள். 25. செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் இந்த இரு-தீவு தேசம், அழகான மலைகளையும் கடற்கரைகளையும் ஒருங்கிணைக்கிறது. இந்த மேற்கு இந்திய நாட்டிற்கு வந்த பின் விசா எடுத்து சுற்றுங்கள். 26. பலாவு இந்த அழகிய சொர்க்கத்தை இந்தியாவிலிருந்து வந்த பிறகு விசா பெற்று எளிதாக விஜயம் செய்ய முடியும்.

27 el salvador

27. எல் சால்வடார் இந்த மத்திய அமெரிக்க நாட்டிற்கு வந்தபின் 30 நாட்கள் விசா எடுத்து பார்க்க முடியும்.

28 nauru

28. நவ்ரூ இந்த உருளைக்கிழங்கு வடிவ நாட்டை 30 நாட்கள் தங்குவதற்கு சரியான விசா வசதியுடன் அணுக முடியும்.

29 djibouti

29. ஜிபூடீ எரிமலை அமைப்புக்களையும் ஜிபூட்டியின் செங்கடல் கடற்கரைகளையும் வருகையின் போது கிடைக்கும் 30 நாட்கள் செல்லுபடியாகும் விசா மூலம் கண்டறிக.

30 guinea

30. கினியா-பிசாவு இந்த மேற்கு ஆப்பிரிக்க நாட்டின் இயற்கை அழகை  இந்தியர்கள் 90 நாட்கள் செல்லுபடியாகும் விசா மூலம் ஆராயலாம்.