இந்தாண்டு 30 பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பம் – எதற்காக தெரியுமா?

சென்னை: பொறியியல் மாணாக்கர் சேர்க்கையில் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளதால், கலை – அறிவியல் கல்லூரிகளாக மாற்றுவதற்கு அனுமதிக்க வேண்டுமென, தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் சார்பாக அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

இந்த 2020-2021ம் கல்வியாண்டில் இந்த மாற்றத்திற்கான அனுமதியை வழங்க வேண்டுமென, கல்லூரிக் கல்வி இயக்குநரகத்திடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் மாணாக்கர் சேர்க்கை வீழ்ச்சி காரணமாக, கடந்த 2017-18ம் கல்வியாண்டில் மட்டும் தமிழகத்தில் மொத்தம் 50க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டன. இதன்மூலம், தமிழக பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 596 என்பதிலிருந்து 537 என்பதாக குறைந்தது.

அதேசமயம், கலை – அறிவியல் படிப்புகளின் மீது அதிகரித்த ஆர்வத்தைக் கண்டு, சேர்க்கைக் குறைவால் அவதிப்பட்ட பல பொறியியல் கல்லூரிகள், கலை – அறிவியல் கல்லூரிகளாக மாறுவதற்கு முடிவெடுத்தன.

இந்நிலையில், இந்தக் கல்வியாண்டில், தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள், கலை – அறிவியல் கல்லூரிகளாக மாறுவதற்கு விண்ணப்பித்துள்ளன.