சுவிட்சர்லாந்து:
றண்டு ஓடும் குழாய்கள் முதல் திரண்டு வரும் வெள்ளம் வரை திடீரென்று மாறும் கால மாற்றத்தை தணிக்கவும், மாற்றியமைக்கவும், அவசர நடவடிக்கை எடுக்காவிட்டால் பல நகரங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று நேற்று WWF எச்சரித்துள்ளது.

WWF வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி: அடுத்த 30 ஆண்டுகளில், 350 மில்லியன் மக்கள் வசிக்கும் 100 பெரிய நகரங்களில் தண்ணீர் பஞ்சம் வரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் உள்ள 50 நகரங்களிலும் இந்தியாவில் டெல்லி, ஜெய்ப்பூர், இன்டோர், அமிர்தசரஸ், புனே, ஸ்ரீநகர், கல்கத்தா, பெங்களூரு, மும்பை, கோழிக்கோடு, விசாகப்பட்டினம் உட்பட 30 நகரங்களில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படக்கூடும் என்றும் WWF- இன் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

மேலும் இந்தியாவில் மழைநீர் சேகரிப்பு மிகவும் அவசியம் என்றும், இந்தியாவில் 8% மழை நீர் மட்டுமே சேகரிக்கப்படுகிறது என்றும், மழை நீரை சேமிக்காவிட்டால் வரும் காலங்களில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்றும், மழை நீர் சேமிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய மான் கி பாத் ரேடியோ நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.