பாக்.கில் பயங்கர குண்டு வெடிப்பு: 30 பேர் உடல் சிதறி பலி

பெஷாவர்:

டமேற்கு பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளுடன் தற்கொலை படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 30 பேர் பலியாகி இருப்பதாகவும், 40 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குண்டு வெடிப்பு நடைபெற்ற பகுதி

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் அவுராக்சாய் மாவட்டத்தில்  ஷியா முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். அகு கலயா என்ற பகுதியில் உள்ள மசூதியை ஒட்டி பிரபலமான சந்தை உள்ளது. இங்கு எப்போதும் போல இன்றும் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தனர்.

அப்போது, பகுதியில் உள்ள ஷியா வழிபாட்டுத் தலத்தை ஒட்டியுள்ள மார்க்கெட்டில் இன்று காலை வழக்கம்போல் ஏராளமான மக்கள் பொருட்கள் வாங்க திரண்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடி குண்டு வெடித்து சிதறியது.

இந்த குண்டு வெடிப்பில் அந்த மார்க்கெட்டில் இருந்த பொதுமக்கள், வியாபாரிகள் உள்பட சுமார் 30க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி செத்தனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.

தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து,காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.  குண்டு வெடிப்பு நடைபெற்ற பகுதி முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த குண்டு வெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கார்ட்டூன் கேலரி