30லட்சம் லஞ்சம்: பாரதியார் பல்கலை. துணைவேந்தர் கைது!

கோவை,

பிரபலமான கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தராக கணபதி இருந்து வருகிறார். இவர் இன்று லஞ்சம் வாக்கும்போது கைது செய்யப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகததில் பல்வேறு வகையான வேலைவாய்ப்புகளுக்கு லஞ்சம் பெறப்பட்டுவதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி இன்று  அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

உதவி பேராசிரியர் பணியிடத்துக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கும்போது அவரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார்  அவரை கைது செய்தனர்.

சுரேஷ் என்ற பேராசிரியரின் பணி நியமனத்துக்காக  கணபதி, அவரிடம் ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும்,  அதன்படி ரூ.1 லட்சம் பணமாகவும், மீதமுள்ள 29 லட்சம் காசோலையாக வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு துறையினர்ல் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.

அவரிடம் லஞ்ச ஒழிப்பு துறையினர் துருவி துருவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.