சென்னை:

மிழகத்தில் நாளொன்றுக்கு 30ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாகவும், இந்தியாவிலேயே அதிக சோதனை நடத்தப்படும் மாநிலமாக தமிழகம் இருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர்  விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்று மேலும் 2710 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 62,087 ஆக அதிகரித்து இருப்பதாக தெரிவித்த அமைச்சர், கண்ணுக்குத் தெரியாத வைரஸை எதிர்த்து முன்கள பணியாளர்கள் போராடுகின்றனர் என்றும்,

சராசரியாக நாளொன்றுக்கு 30,000 பரிசோதனைகள் செய்கிறோம், தமிழகத்தில்  இதுவரை 9.19 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன, இந்தியாவிலேயே அதிக பரிசோதனைகள் செய்து வரும் மாநிலம் தமிழகம் தான்  என்று தெரிவித்தார்.

கொரோனா நோய்த் தொற்றில் இருந்து  குணமடைவோர் விகிதம் தமிழகத்தில் தான் அதிகம் என்று கூறியவர், தமிழகத்தில் 55% பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்,  இன்று 1,358 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்,  தமிழகத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக 34,112 பேர் குணமடைந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.