குஜராத்: 300 தலித்கள் புத்த மதம் மாறினர்

அகமதாபாத்:

குஜராத் மாநிலம் உனா தாலுகா சமிதியா கிராமத்தில் பாகுபாடுக்கு எதிராக போராடி வந்த தலித் குடும்பத்தை சேர்ந்த 300 பேர் இன்று புத்த மதத்திற்கு மாறினர்.

இதில் 2016ம் ஆண்டு ஜூலை மாதத்தில் தாக்குதலுக்கு உள்ளான தலித் குடும்பத்தினரும் இடம்பெற்றுள்ளனர். போர்பந்தரில் இருந்து புத்த மத துறவி இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி 300 பேரையும் புத்த மதத்தில் இணைத்து கொண்டார்.