உ.பி. கைரானா தொகுதியில் 300 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது: முன்னாள் காங். அமைச்சர் பிரபுல் பட்டேல் தகவல்

டில்லி:

ன்று  நாடு முழுவதும் காலியாக உள்ள சட்டமன்ற, பாராளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

இன்று உ.பி.மாநிலம் கைரானா தொகுதியிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த தொகுதியில் உபயோகப்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களில்  300 எலக்ட்ரானிக் இயந்திரங்கள் வேலை செய்ய வில்லை என்பது தெரிய வந்ததுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து உ.பி.மாநில சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தன்னிடம் இந்த தகவல் தெரிவித்ததாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பிரபுல் பட்டேல் தெரிவித்துள் ளார்.

மேலும் உலகம் முழுவதும் உள்ள பெரிய பெரிய நாடுகள் அனைத்தும், வாக்குப்பதிவு இயந்திரகளில் குறைகள் இருப்பதாக கூறி, தற்போது வாக்குச்சீட்டு பதிவு முறைக்கு மாறி உள்ளது. அதுபோல நமது நாட்டில் வாக்குசீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும்  பண்டாரா-கோண்டியா தொகுதியிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள்  சரியாக வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

த்தரப்பிரதேச மாநிலம் கைரானா தொகுதி எம்.பி. பாஜக எம்பி ஹூகும் சிங்  மறைவை தொடர்ந்து அங்குஇன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தொகுதியில் சிங்கின் மகள் மிருகங்கா சிங் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து ராஷ்டிரிய லோக் தள கட்சியின் தபசும் ஹசன் நிறுத்தப்பட்டு உள்ளார். இவருக்கு காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் ஆதரவளித்துள்ளன.

அதுபோல  மகாராஷ்டிராவின் பந்த்ரா – கோண்டியா, பால்கர் ஆகிய இரு நாடாளுமன்ற தொகுதிகள், நாகாலாந்தில் ஒரு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்கம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் 10 சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது.