சென்னையில் இருந்து ஆயுத பூஜையை முன்னிட்டு 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சென்னை

சென்னையில் இருந்து ஆயுத பூஜையை முன்னிட்டு 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

கொரோனா ஊரடங்குக்கு பிறகு தற்போது மீண்டும் பேருந்துகள் இயங்கத் தொடங்கி உள்ளன.

தற்போது வழக்கத்தை விடக் குறைவான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

வரும் 25 ஆம் தேதி அன்று ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ளது.

இதையொட்டி பயணிகள் வசதிக்காகக் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதில் 300 கிமீ தூரத்துக்கு மேல் பயணிப்போர் முன்பதிவு மையங்கள் அல்லது www.tnstc.in  என்னும் இணைய தளம் மூலம் முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.

மேலும் தீபாவளிக்கான சிறப்புப் பேருந்துகள் குறித்த விவரம் நவம்பர் முதல் வாரம் அறிவிக்கப்பட உள்ளது.